அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் ஈமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனை

0
202

தொடர்ந்து இந்த குற்றத்தை செய்தால் அபராதம் மூன்று இலட்சம் ரியால் வரை அதிகரிக்கப்படும். சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் ஈமோஜி (Heart Emoji) அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை சவுதி மற்றும் குவைத் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளன.

வாட்ஸ்-அப், பேஸ்புக் மெசெஞ்சர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நம் உணர்வுகளை கீபேட் வழியே வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு ஈமோஜிக்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் முக்கியமானது ஹார்ட் ஈமோஜி . காதலர்கள், தம்பதிகள், நண்பர்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறிக் கொள்ள இந்த ஈமோஜி பயன்படுத்துவதுண்டு.

இந்த நிலையில், இந்த ஹார்ட் ஈமோஜி அறிமுகமில்லாத பெண்களுக்கோ அல்லது துஷ்பிரயோகம் செய்யும் நோக்கிலோ அனுப்பினால் சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் புதிய சட்டம் ஒன்றை குவைத் அரசாங்கம் இயற்றியுள்ளது.

அவ்வாறு ஹார்ட் ஈமோஜி அறிமுகமில்லாத பெண்களுக்கு அனுப்பப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 2000 தினார் (ரூ.5,37,800) அபராதமும் விதிக்கப்படும்.

இதேபோன்று, குவைத்தின் அண்டை நாடான சவுதியிலும் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 இலட்சம் ரியால் (ரூ.22 இலட்சம்) அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து இந்த குற்றத்தை செய்தால் அபராதம் மூன்று இலட்சம் ரியால் வரை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.a

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here