தேவராட்டம் படத்தில் கௌத்தம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா நிஜ வாழ்க்கையிலும் அருக்கு ஜோடியானார். நடிகை மஞ்சிமா மோகன் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.
தேவராட்டம் படத்தில் கௌத்தம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா நிஜ வாழ்க்கையிலும் அருக்கு ஜோடியானார்.
சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து கொண்டிருந்த நேரம் திடீரென்று அவரின் எடை அதிகரித்து வாய்ப்பு குறைய தொடங்கியது. உடல் எடை பற்றி எல்லாம் கவலைப்படாமல் மஞ்சிமா இருந்து வந்தாலும், அவரை பலரும் உருவக் கேலி செய்து வந்தனர்.
திருமணத்தில் அவர் குண்டாக இருந்தது நிறைய விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார்.
இது குறித்து அவர் பகிர்ந்த காணொளி இணையத்தில் வைரலாகி எடை குறைக்க முயலும் பெண்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.