நாட்டின் பல பிரதேசங்களில் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

0
183

நாளை (19) காலை 8 மணி தொடக்கம் நாளை மறுதினம் (20) அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்தல் விடுத்துள்ளது.

அத்தியாவசிய மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (19) காலை 8 மணி தொடக்கம் நாளை மறுதினம் (20) அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

கொழும்பு , தெஹிவளை , கல்கிஸ்ஸ , கோட்டை , கடுவலை நகரசபைக்குட்பட்ட பிரதேசம் , மஹரகம , பொரெல்லெஸ்கமுவ , கொலொன்னாவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசம் , கொடிகாவத்த , முல்லேரியாவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசம், ரத்மலான மற்றும் கடுபெத்த போன்ற பிரதேசங்களில் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here