திங்கட்கிழமை காலை 8 மணிக்கு ரயில் பாதை மூடப்பட்டு செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை 5.00 மணிக்கு திறக்கப்படும். களனி புகையிரத பாதையில் நாரஹேன்பிட்டி மற்றும் நுகேகொட இடையேயான புகையிரத பாதை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 21 மணித்தியாலங்களுக்கு முற்றாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கலிங்க மாவத்தை புகையிரத கடவையை பராமரிப்பதற்காகவே புகையிரத பாதை மூடப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திங்கட்கிழமை காலை 8 மணிக்கு ரயில் பாதை மூடப்பட்டு செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை 5.00 மணிக்கு திறக்கப்படும்.
இந்த காலப்பகுதியில் கலிங்க மாவத்தை புகையிரத கடவையை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.