கிம்புலாவல தெருவோர உணவுக் கடைகளை அகற்ற அறிவிப்பு

0
280

குறித்த வீதியில் தற்காலிக வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமே அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள கிம்புலாவல பகுதியில் உள்ள தெருவோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த உணவு விற்பனை நிலையங்களை 14 நாட்களுக்குள் அகற்றுமாறு விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த வீதியின் ஊடாக இயங்கும் வாகனங்களுக்கு இந்த தெருவோர உணவு விற்பனை நிலையங்கள் இடையூறாக உள்ளதுடன், அனுமதியின்றி இரண்டு மாடிக்கட்டிடங்களும் கட்டப்பட்டுஉள்ளன.

இதன் காரணமாக இப்பிரதேசத்தில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன. வீதி விபத்துக்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வர்த்தக நிலையங்களை நடத்த விரும்புவதாக விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த வீதியில் தற்காலிக வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமே அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here