மிச்சிகன் மாநிலத்திற்கான விமான சேவைகள் தாமதமாகின.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தை தாக்கிய சூறாவளி- 5 பேர் மரணம் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைத் தாக்கியுள்ள நான்கு சூறாவளியில் இதுவரையில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒரு வயதுக் குழந்தையும், மூன்று வயது சிறுமியும் உள்ளடங்குவர்.
ஒரு மணிநேரத்திற்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால் மிச்சிகன் பகுதியில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.இதேவேளை காற்றுடன் கூடிய பலத்த மழையினால் மிச்சிகன் மாநிலத்திற்கான விமான சேவைகள் தாமதமாகியதுடன், சாலைகளும் மூடப்பட்டன.
டெட்ராய்ட் மெட்ரோ விமான நிலையத்தில் 60 விமான பயணங்கள் தாமதமானதுடன், 23 விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக ப்லைடை்அவயர் (FlightAware)தெரிவித்தது. மிச்சிகன், ஓஹியோவில் சூறாவளியினால் 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் மின்தடையால் பாதிக்கப்பட்டனர்.
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை மேற்கொள்ள மிச்சிகன் மாநில அதிகாரிகள் அங்கு அவசல நிலையை பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.