ஹட்டன் பேருந்து தரிப்பிடம் காலவரையறையின்றி மூடப்படுகின்றது!

0
355

பேருந்துகள் ஹட்டன் தபால் நிலையம், சுசி ஆடையகம் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் பேருந்து தரிப்பிடம் தூய்மையாக இல்லை என எழுந்த முறைப்பாடுகள் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தற்போது ஹட்டன் பேருந்து தரிப்பு நிலையத்தின் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேருந்து நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் பேருந்து தரிப்பிடமானது மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது.  இதன்போது, நகரபிதாவிடம் நாம் வினவிய போது,

“அசுத்தமாக இல்லை. நாம் தினமும் தூய்மை பணியில் ஈடுபடுகின்றோம். தினமும் காலையில் சென்று பார்வையிடுகின்றோம். மேலும், வாரம் ஒருமுறை தூய்மைபடுத்துகின்றோம்“ என  தெரிவித்திருந்தனர்.

ஆனால், ஹட்டன் பேருந்து தரிப்பிடமானது மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக அண்மையில் நகரசபைக்கு பொதுமக்களால் முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் அரச பேரூந்து நிலையத்தின் பரிதாப நிலை – இந்த நிலைக்கு யார் காரணம்?

இதனைதொடர்ந்து, தற்போது திருத்தப்பணிகளை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் தற்காலிகமாக பேருந்து தரிப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், ஹட்டன் பொகவந்தலாவை, மஸ்கெலியா, ஒஸ்போன் , நோட்டன், காசல்ரீ, சாஞ்சிமலை, ஓல்டன், போடைஸ் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் ஹட்டன் தபால் நிலையம், சுசி ஆடையகம் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹட்டனிலிருந்து- கொழும்பு – கண்டி – தலவாக்கலை- வட்டவளை- நாவலப்பிட்டி- நுவரெலியா-உட்பட அப்பகுதியில் செல்லும் தனியார் –அரச பேருந்துகள் கார்கில்ஸ் புட் சிட்டி அமைந்துள்ள பகுதிகளில் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here