இன்றைய தினம் நுவரெலியா மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் மற்றும் அபிவிருத்தி பிரிவினர் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட நுவரெலியா மாநகர சபையின் ஊழியர்கள் அனைவருக்கும் ஒருநாள் வைத்திய முகாம் நுவரெலியா மாநகர சபையின் ஆளுநர் மற்றும் உதவி அரசாங்க அதிபரான சுஜிவா போதிமான்ன அவர்களின் தலைமையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைத்தியர்களால்இச் சேவை நடைபெற்றது. இதன் முக்கிய நோக்கமானது நுவரெலியா நகரை அழகு சேர்க்கும் முகமாக பல்வேறு தொழில் ஈடுபட்டு வரும் இவ் ஊழியர்களின் நலன் கருதி வைத்திய முகாம் சேவையானது ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் இவர்களின் சரும நோய் மற்றும் வாய் புற்றுநோய் நீரிழிவு உள்ள நோய் இரத்த பரிசோதனைகள் போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு இவ் முகம் நுவரெலியா மாநகர சபையின் கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ் வைத்திய முகாமில் சுமார் 700க்கும் அதிகமான ஊழியர்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்