சமையல் எரிவாயு விலை இன்று அதிகரிக்கும் சாத்தியம்

0
188

அண்மை காலங்களை விட அதிகமான விலை அதிகரிப்பாக இது அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சமையல் எரிவாயு விலை இன்று அதிக விகிதத்தால் அதிகரிக்கப்படலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், புதிய விலை தொடர்பில் இன்று முற்பகல் அறிவிக்கப்படுமெனவும் உலக சந்தையில் எரிவாயுவின் விலை சுமார் 105 டொலராக அதிகரித்துள்ளதாக லிட்ரோ எரிவாயுன் நிறுவனத் தலைவர் முஜித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மை காலங்களை விட அதிகமான விலை அதிகரிப்பாக இது அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய இந்த விலை உயர்வு உள்ளூர் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாவும் அவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, கடந்த மாதம் 4ஆம் திகதியளவில், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்பட்டு 2982 ரூபாயாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 83 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1198 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் எரிவாயு விலை அதிகரிக்கப்படுகின்றமையானது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here