முரளியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்; சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு

0
227

முரளி மற்றும் அவரது மனைவி கதாபாத்திரங்களில் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர்.முரளியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்; சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.செவ்வாய்கிழமை அன்று முரளியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் முன்னோட்டம் மும்பையில் வெளியிடப்படுகிறது.

51 வயதான இலங்கை அணியின் சுழற்பந்து வீச்ரான முத்தையா முரளிதரன் தனது டெஸ்ட் வாழ்க்கையை ஜூலை 22, 2010 அன்று இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 800வது விக்கெட்டுடன் முடித்துக்கொண்டார்.

முரளி 21 மார்ச் 2005 அன்று சென்னையைச் சேர்ந்த மதிமலர் என்பவரை மணந்தார். மதிமலர், சென்னையில் உள்ள மலர் மருத்துவமனையின் மறைந்த வைத்தியர் எஸ்.ராமமூர்த்தியின் மகள் ஆவார்.

முரளி மற்றும் அவரது மனைவி கதாபாத்திரங்களில் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்தியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றன.

படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருடன் முரளி கலந்து கொள்கிறார்.

மேலும் இலங்கை ஜாம்பவான் சனத் ஜயசூர்யாவும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here