க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்!

0
227

2022 (2023) அம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில், காலி ரிச்மண்ட் கல்லூரி சேர்ந்த சமுதிதா நயனப்ரியா என்ற மாணவி பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த கவிதினி தில்சராணி தருஷிகா என்ற மாணவி வர்த்தகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இதன்படி, உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தைச் சேர்ந்த பிரமோதி பஷானி முனசிங்க முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த மனேத் பானுல பெரேரா பௌதீக விஞ்ஞானப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here