நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்;ந்து மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மழையுடன் கடும் காற்று வீசுவதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்து போக்கு வரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
ஹட்டன் நோர்ட்டன் பிரதான வீதியில் மரத்தின் கிளையொன்று நேற்று இரவு வீதியின் குறுக்கே சரிந்து வீழ்ந்ததையினால் அவ்வீதியூடான போக்கு வரத்துக்கு சில மணித்தியாலங்கள் பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன.சில இடங்களில் மண்திட்டுக்களுக்கும் சரிந்து வீழ்ந்துள்ளதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதே நேரம் மழையுடன் அடிக்கடி பனிமூட்டமும் காணப்படுவதனால் மலையக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தமக்குரிய பக்கத்தில் செலுத்துவதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
தொடர் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக சில பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவும் மிகவும் குறைவாக வருகை தந்துள்ளதாக பாடசாலை அதிபர்கள்;; தெரிவிக்கின்றனர்.
இதனால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக பெய்து மழை காரணமாக பெருந்தோட்டங்களில் தொழிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் இதனால் தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சி கண்டு வருவதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர்.
அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் தங்களது தொழில்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளன.மற்றும் கால் நடை வளர்ப்பாளர்கள் தங்களுடைய கால் நடைகளுக்கு புல் அறுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக நிலவிய வறட்சியினை தொடர்ந்து நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் கணிசமான அளவு குறைந்தன எனினும் தற்போது பலத்த மழை பெய்துவருவதனாலும் நீர் போசன பிரதேசங்களுக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாவதனாலும் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் படிப்படையாக உயர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மலைசாஞ்ஞன்