உயர்தர பரீட்சை :பார்வையற்ற மாணவன் படைத்த சாதனை

0
163

பார்வையற்ற மாணவன் உயர்தரப் பரீட்சையில் கண்டி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.கலைப் பிரிவில் தோற்றிய பார்வையற்ற திவங்க என்ற மாணவனே இந்த சாதனையைப் படைத்தவராவார்.

சிங்களம், பௌத்த நாகரிகம், வெகுஜன தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள் ஆகிய பாடங்களில் தோற்றியிருந்த திவங்க, 03 ஏ சித்திகளைப் பெற்று நாடளாவிய ரீதியில் 75ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

கெலிஓயா ஸ்ரீ பிரக்னரதன மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற திவங்க 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் போது பார்வையை இழந்துள்ளார். திவங்க 10 ஆம் ஆண்டில் மூன்றாம் தவணையில் படித்துக் கொண்டிருக்கும் போதே இந்த துரதிர்ஷ்டவசமான நிலைக்கு ஆளானார்.திவங்காவின் தந்தை திவங்க பிறந்து மூன்று மாதங்களில் மாரடைப்பால் உயிரிழந்தார். அதன்பிறகு அவருடைய அனைத்து வேலைகளையும் தற்போது 43 வயதாகும் அவரது தாயார் செய்துவருகிறார்.

15 வயதில் திடீரென பார்வைக் குறைபாட்டிற்கு ஆளான திவங்க அதன் பிறகு தனது வாழ்வின் நிழலாக இருந்த தனது தாயார் நிரோஷனி சுஜீவ குமாரியின் உதவியுடன் தனது கல்வியை தொடர்ந்தார்.

இது குறித்து திவங்க ரணபாகு இவ்வாறு தெரிவித்தார். “அம்மா பாடம் மற்றும் கேள்விகளை படிக்கும் போது நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.அதன் பிறகு அம்மா பதில் எழுதினாள்.இரண்டு கண்களும் பார்க்கும் போது திடீரென்று குருடானேன்.சாதாரண தர பரீட்சை எழுதுவதே சவாலாக இருந்தது.

பரீட்சை தேர்வின் போது இரண்டு ஆசிரியர்கள் வினாத்தாளை என்னிடம் வாசித்தனர்.அதைக் கேட்டுவிட்டு கேள்விகளுக்குப் பதிலளித்தேன்.அதைக் கொடுத்ததும் மற்றொரு ஆசிரியர் எழுதினார்.எனக்கு 04 ஏ, 03 பி மற்றும் 03 சிக்கள் கிடைத்தன.எனக்கு சிங்களம், வரலாறு, பௌத்தம் மற்றும் இசையில் ஏ.சித்திகள் கிடைத்தன.

“பின்னர், உயர்தரத்தில் பாடத்தை மிகவும் கடினமாகப் படித்தேன். கண் சிகிச்சையால் சுமார் ஒரு வருடம் பாடசாலைக்கு செல்வது கடினமாக இருந்தது. ஒன்லைன் கற்பித்தல் திட்டங்கள் மூலம் பாடம் நடத்தப்பட்டது. நான் உயர்தரத்தில் 05 மாதங்கள் மட்டுமே பாடசாலைக்கு சென்றேன்.

நான் சத்தமாகப் படித்தேன். பிறகு நான் சொல்லும் பதில்களை தாய் எழுதினாள். உண்மையில் என்னுடன் உயர்தர பரீட்சையில் என் அம்மாவும் எழுதினார் என்று சொல்வது சரிதான்.”

இப்படி வருவேன் என ஒருபோதும் எண்ணியதில்லை

“அம்மாவின் உழைப்பை வீணாக்காத ஒரு பெறுபேற்றை அவளுக்கு கொடுக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்தேன்.பரீட்சைக்கு தோற்றிய பிறகு நான் மூன்று பாடங்களிலும் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் கண்டி மாவட்டத்தில் முதலாவதாக வருவேன் என்று நினைக்கவில்லை.

கண்கள் திடீரென பார்வையற்று போனது ஏன் என மருத்தவர்கள் கூட குறிப்பிட்ட காரணத்தைக் கூறவில்லை என்கிறார் திவங்கா.செரிப்ரோஸ்பைனல் திரவத்தின் அழுத்தம் அதிகரிப்பதால், கண்கள் குருடாகிவிட்டதாகவும், இது ஏன் நடந்தது என்பதற்கான காரணம் கூறப்படவில்லை என்றும் அவர் கூறினார். எதிர்காலத்தில் ஆசிரியப் பணியில் சேர்ந்து பேராசிரியராகப் பணிபுரிவதும், தாயின் ஆதரவுடன் நாட்டுக்காக உழைக்கும் நபராகப் பணியாற்றுவதே தனது நோக்கம் என்றும் திவங்கா மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here