Cathay Pacific இலங்கையின் வானில் மீண்டும் பறக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஹொங்கொங்கை முக்கிய தளமாக கொண்ட Cathay Pacific Airlines இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
கொரோனா தொற்று நிலைமை மற்றும் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில், கடந்த பருவத்தில் இலங்கைக்கான அவர்களின் விமானங்களை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி முதல் ஹொங்கொங்கில் இருந்து கட்டுநாயக்கவிற்கும், கட்டுநாயக்கவிலிருந்து ஹொங்கொங்கிற்கும் Cathay Pacific விமான சேவைகள் மேற்கொள்ளப்படும்.
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, Cathay Pacific இலங்கையின் வானில் மீண்டும் பறக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
Cathay Pacific தனது Airbus A330 விமானத்துடன் திரும்பவுள்ள நிலையில், கொழும்பில் இருந்து வாரத்திற்கு மூன்று விமானங்களை இயக்கவுள்ளது.
ஹொங்கொங்கிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால விமானப் பங்காளித்துவத்தின் மறுமலர்ச்சியை இந்த மீள்தொடக்கம் குறிக்கிறது.
கொழும்பு பயணிகளின் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் அதே வேளையில், அதிகரித்து வரும் ஓய்வு மற்றும் வணிகப் பயணிகளின் எண்ணிக்கையை இலங்கை தொடர்ந்து வரவேற்று வருவதால், Cathay Pacific இன் பயணம் , வசதி மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.