கொழும்பில் அதிகரிக்கும் வாகன உதிரிபாகங்கள் திருட்டு சம்பவம்

0
223

அண்மை காலமாக கொழும்பு நகரில் வாகன உதிரிபாகங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கொழும்பு மாநகர சபையின் போக்குவரத்து திட்டமிடல் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் மஞ்சுள குலரத்னவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் உள்ள வாகன தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களின் கண்ணாடி உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படுவதால் வாகன உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், உந்துருளி, முச்சக்கர வண்டி, மகிழுந்துகள் போன்றவற்றின் கண்ணாடிகள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படுகின்றமை தொடர்பில் அதிகளவு முறைப்பாடு பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here