இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் 146சென்றிமீற்றர் (4 அடி 9.5 அங்குலம்) முடியை நீளமாக வளர்த்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
உலகிலேயே மிகவும் நீளமான முடியைக் கொண்ட இளம்வயது சிறுவன் என்ற சாதனையை படைத்துள்ளார்.குறித்த சிறுவன், அவரது சாதனை தொடர்பில் பேசும் போது,
“சிறுவயது முதலே தனது தலைமுடியை வெட்டியதே இல்லை எனவும் அவரது தாயார் இல்லையென்றால் தன்னால் முடியை பராமரிப்பது மிகவும் கடினமெனவும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளார்.
சிறுவயதிலிருந்தே அனைவரும் என்னை கேலி செய்வார்கள். பெண் பிள்ளைகளை போல் முடி வளர்த்து இருக்கின்றான் என பின்னால் இருந்து சிரிப்பார்கள்.
“இன்று அவர்கள் என்னை பார்த்து ஆச்சர்யப்படுவார்கள்“ என குறிப்பிட்டுள்ளார்.
எனது முடி, கேலிகளை சந்தித்த காலம் முடிவடைந்தது என தெரிவித்துள்ளார்.
அனைவரும் நம்புவார்களோ இல்லையோ என்னுடைய தனித்தன்மை என்னுடைய முடி என நான் கூற மாட்டேன்“ எனவும் சிரித்துகொண்டே கூறியிருக்கின்றார்.
2024ஆம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனைகளுக்கான சாதனையாளர்களை தெரிவு செய்வதற்கான போட்டிகளும் தற்போது ஆரம்பித்துள்ளன.ஆகவே, திறமையுடையவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.