நசீர் அஹமத் பதவி இழந்தார் !

0
266

உயர் நீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பை அடுத்து சுற்றாடல் துறை அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நசீர் அஹமத் பதவி இழந்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ஏ. ரோஹனதீர உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று (09) திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்குப்பட்டியலில் அடுத்ததாக உள்ள நபரின் பெயர் விரைவில் வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here