மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு மஸ்கெலியா நல்லத்தண்ணி லக்ஷபான தோட்டத்தில் இடம்பெற்றது.மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தொடரில் கட்சி பிரமுகர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் தோட்டநிர்வாகத்தால் தோட்டத்தொழிலாளர்களுக்கும் தோட்ட மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியை சுட்டிக்காட்டப்பட்டதோடு அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் இவ்வரசாங்கத்தித்தின் தன்மைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக விலையேற்றம்,சமூக ஊடகத்தின் மீதான கட்டுப்பாடுகள்,தேர்தல் நடத்த அரசாங்கம் பின்வாங்குவது தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.அதோடு நல்லத்தண்ணி லக்சபான தோட்டத்திற்கு கூரைத்தகரங்களும்,நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தொடரில் மலையக மக்கள் முன்னணி கட்சி முக்கியஸ்தர்கள், அப்பகுதி தோட்ட மக்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.