அதிபர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் நவம்பர் மாத தொடக்கத்தில் 4718 அதிபர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆசிரியர் கல்வி சேவையில் 705 வெற்றிடங்களும், கல்வி நிர்வாக சேவையில் 405 வெற்றிடங்களும் நிரப்பப்படுவதன் மூலம் ஆசிரியர் ஆலோசகர் சேவையில் உள்ள முரண்பாடுகள் களையப்பட்டு அந்த சேவை தொடர்பான வெற்றிடங்கள் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.