பல்கலைக்கழக விடுதிகளை இரவு வேளையில் சோதனைக்கு உட்படுத்த தீர்மானம்

0
100

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்கான தேசிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விடுதிகளை இரவு வேளைகளில் சோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விடுதிகளில் இடம்பெறும் பகிடிவதைகளை தடுப்பதே இதன் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 05 மணி வரையான காலப்பகுதியில் அதிகளவிலான பகிடிவதைகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்காக பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரிகள் மற்றும் மாணவ ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அவர்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் வாகன வசதிகள் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதன்போது தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்கான தேசிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக WhatsApp இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விரைவான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனஉயர்கல்வி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here