எரிபொருளை சேமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

0
125

இஸ்ரேல் – காஸா பகுதியில் நிலவி வரும் மோதல், உக்ரேன் – ரஷ்யா இடையிலான மோதல் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
போதுமான எரிபொருளை கையிருப்பில் சேமித்து வைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.அண்மையில், ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சர்கள் சபைக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இஸ்ரேல் – காஸா பகுதியில் நிலவி வரும் மோதல், உக்ரேன் – ரஷ்யா இடையிலான மோதல் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துவருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அனைத்து களஞ்சியசாலைகளிலும் போதியளவு எரிபொருள் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் போர்கள் இது நீண்ட காலப் போராக மாறும் என்ற நம்பிக்கையில் மசகு எண்ணெய் உற்பத்தியாளர்களும் தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளைக் குறைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here