சிறுநீரக நோயாளர்களின் உயிர்காக்கும் இயந்தியரத்தை பெற்றுக்கொடுத்த செந்தில் தொண்டமான்!

0
148

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பல இலட்சம் பெறுமதியான இயந்திரங்கள் திருக்கோணமலை கந்தளாய் வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

ஐ.ஓ.சி நிறுவனத்தின் தலைவர் தீபக் தாஸிடம் கிழக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் மதிப்புள்ள இந்த உயிர்க்காக்கும் சிறுநீரக இயந்திரம் (Dislysis) பெற்றுக்கொடுத்துள்ளார்.

இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வு திருகோணமலை ஐ.ஓ.சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்மூலம் மேற்படி இரண்டு வைத்தியசாலைகளிலும் சிறுநீரக சிகிச்சைகளுக்காக செல்லும் நோயாளர்களின் உயிராபத்துகள் எதிர்காலத்தில் குறைவடையும்.

இலங்கையில் சிறுநீரக நோயாளர் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் செந்தில் தொண்டமானின் முயற்சியால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள் உயிரிழப்புகளை குறித்த பிரதேசங்களில் குறைவடை செய்யும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here