கூகுளின் புதிய கடன் சேவை!

0
133

உலகின் மிக பிரபலமான தேடுதல் பொறி நிறுவனமான கூகுள் தற்போது புதிய கடன் சேவை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது கூகுள் செயலி மூலம் மிகவும் சிறிய அளவிலான தொகையை கடனாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.

குறித்த கடன் தொகையானது சாசெட் கடன்கள்(sachet) என அழைக்கப்படுகிறது.இந்த திட்டத்தினை கூகுள் தனது கூகுள் பே(google pay) மூலம் அறிமுகம் செய்துள்ளது.

அத்தியாவசிய தேவைகள் ஏற்படும் பொது ஒவ்வொருவரிடமும் கடன் கேட்க முடியாது எனவேதான் சிறு வணிக முதலாளிகளுக்கு ரூபாய் 15000 வரை இந்த சிறு கடன் திட்டம் வழங்கப்படவுள்ளது.

இந்த கடன் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில் இந்த கடன் தொகையை வெறும் 111 ருபாய் என்ற சிறிய தொகையில் திருப்பி செலுத்தலாம் .

இந்த திட்டத்தினை ஏ பே லட்டேர் (ePayLater)உடன் இணைந்து கூகுள் பே(google pay) வாயிலாக செயல்படுத்த உள்ளது. இந்த கடன் தொகையை ஒன்லைன் மற்றும் ஆப்லைன் ஊடாகவும் பயன்படுத்த முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here