ஒரே செயலி : இரண்டு வாட்ஸ் அப் கணக்குகள்

0
149

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார்.

அதாவது, மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் (App) ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை (Accounts) பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிடுகையில்,“இப் புதிய மேம்படுத்தல் மூலம் பயனர்கள் ஒரே செயலியில் (App) இரண்டு கணக்குகளை (Accounts) பயன்படுத்த முடியும்.அத்துடன், ஒரு தொலைபேசியில் இரண்டு வாட்ஸ் அப் செயலிகள் வைத்திருக்க தேவை இல்லை.

இந்த வசதி முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்கு மட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் ஏனைய பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.” என்றார்.

சமீபக்காலமாக, பாவனையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதிய வசதிகளை வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here