நுவரெலியா மாவட்டத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.உபாலி பிரியந்த ஜயசிங்க தனது 39 வருட பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
இவ்வாறு தனது சேவைக்காலத்தை நிறைவு செய்து விடைபெற்று செல்லும் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பிரியாவிடை நிகழ்வு நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் (21) காலை பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மன. தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதி பொலிஸ்மா அதிபரின் சேவையைப் பாராட்டி அவருக்கு கௌரவிப்பு செய்யப்பட்டது இதன் போது அவர் கண்ணீர் மங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் 1984 ஆம் ஆண்டு உதவி இன்ஸ்பெக்டராக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட அவர் 39 வருடங்கள் தனது பொலிஸ் சேவையை திறம்பட செய்துள்ளார்.
இவரின் சேவைக்காலத்தில் ஊழல் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு,நடவடிக்கையில் நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றிய அதிகாரி என்பது விசேட அம்சமாகும்.
பின் அவரின் பணியை பாராட்டி பதவி உயர்வு பெற்ற அவர் நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டு
கடமையாற்றிய பின்னர் ஓய்வு பெற்று பொலிஸ் மரியாதையுடன் விடை பெற்றார்.
டி சந்ரு