சீரக தண்ணீரை தினமும் காலையில் குடிப்பதால் நமது உடலில் உள்ள இன்சுலின் உற்பத்தி தூண்டப்படுகிறது. அதோடு க்ளைகோஸ்லேடேட் ஹீமோகுளோபின் அளவையும் குறைக்கிறது.
சமீப காலமாக பலரும் தங்களது தொப்பையை குறைக்க தினமும் சீரக தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த சீரக தண்ணீர் நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மெட்டபாலிஸத்தையும் அதிகப்படுத்துகிறது என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
இதன் காரணமாகவே நமது உடலில் கொழுப்பு சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது சீரக தண்ணீர். இது அதிசிய பானம் இல்லை என்றாலும் ஒருவரின் உடல் எடையை குறைக்க ஓரளவிற்கு உதவி செய்கிறது என்பதை நாம் ஒத்துக்கொள்ளவே வேண்டும்.
சீரகத்திலுள்ள தைமோகுயினோனின் நமது கல்லீரலை பாதுகாக்கிறது. இது நொதிகளை உற்பத்தி செய்ய கனையத்தை தூண்டுகிறது. இதன் காரணமாக செரிமானம் எளிதாகிறது. செரிமானம் ஆரோக்கியமாக இருந்தால் வயிற்றில் சேரும் கொழுப்பும் குறைகிறது. ஒரு க்ளாஸ் சீரக தண்ணீர் குடிப்பதால் கார்போஹைடரேட்ஸ், குளுகோஸ், கொழுப்புகள் போன்றவை துண்டு துண்டாக உடைக்கப்படுகின்றன. இதனால் அஜீரணப் பிரச்சனை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
சீரக தண்ணீரை தினமும் காலையில் குடிப்பதால் நமது உடலில் உள்ள இன்சுலின் உற்பத்தி தூண்டப்படுகிறது. அதோடு க்ளைகோஸ்லேடேட் ஹீமோகுளோபின் அளவையும் குறைக்கிறது. மேலும் சீரகத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாகவும் காரணமாக இருக்கிறது.
உடல் பருமனை தடுக்க ஆயுர்வேதத்தில் பல உணவுகளில் ஒன்றாக சீரகமும் பரிந்துரைக்கபடுகிறது. ஆயுர்வேதத்தின் படி ஒருவரின் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. நமது உடலின் செயல்பாடுகளுக்கும் ஆற்றலுக்கும் அசைவுகளுக்கும் காரணமாக இருக்கிறது வாதம். பித்தமானது நமது உடலில் உள்ள இன்சுலின், ஹார்மோன், என்சைம்ஸ் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கிறது. வாதம், பித்தம் இந்த இரண்டின் செயல்பாட்டையும் சரிசமமாக கட்டுப்படுத்துகிறது கபம். இந்த சீரகமானது வாதத்தையும், கொஞ்சம் கூடுதலாக கபத்தையும் பாதிக்கிறது
கப கோளாறினால் தான் உடல் பருமன் ஏற்படுகிறது. இயற்கையாகவே ஒருவருக்கு கபம் இருந்தால், சீரக தண்ணீர் குடிப்பதன் மூலம் அவருக்கு பல நன்மைகள் கிடைக்கும். பித்த உடம்புள்ளவர்களுக்கு பெரிதாக பலன் இருக்காது. இதுதவிர சீரகத்தில் வேறு பல நன்மைகளும் உள்ளது. இது பசியை தூண்டக்கூடியது; சிறந்த நச்சுநீக்கி; எச்சிலோடு கலந்து நமது மேல்வாயை சுத்தப்படுத்துகிறது. வெல்லத்தோடு சேர்த்து சீரகத்தை சாப்பிட்டல் வாய்வுத் தொல்லை சரியாகும்.
சரி, சீரக தண்ணீரை எப்படி அருந்தலாம்? எப்போது அருந்தலாம்? பெரும்பாலானோர் இதை தினமும் காலையில் குடித்து வந்தாலும், ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். உணவு சாப்பிடும் போது கூட இதை குடிக்கலாம். உணவு சாப்பிட்டுக் கொண்டே ஒரு மிடறு சீரக தண்ணீர் குடிப்பதால் உடலில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். நீங்கள் விருபப்பட்டால் குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ கூட சீரக தண்ணீரை குடிக்கலாம்.
சீரக தண்ணீர் நம் தொப்பையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் நமது மெட்டபாலிஸத்தை மேம்படுத்தி உடலில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.