தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

0
147

ஓய்வு பெற்றுள்ள தாதியர்களுக்கும் ஓய்வு பெறும் நிலையிலுள்ள தாதியர்களுக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதன்படி அரச தாதியர் சேவையில் தரம் நான்கைச் சேர்ந்த தாதியர்கள் 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெற வேண்டுமென மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (24) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், ஏற்கனவே ஓய்வு பெற்ற அந்தந்த பதவிகளில் உள்ளவர்களையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here