அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் லூயிஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 முதல் 60 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துப்பாக்கிச்சூடு நடத்திய துப்பாக்கிதாரியை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரின் புகைப்படத்தை தங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட லூயிஸ்டன் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.