காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு மகரிஷிகளின் 90 வது ஜனன தின ஜெயந்தி விழா

0
216

நுவரெலியா லங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு மகரிஷிகளின் 90 வது ஜனன தின ஜெயந்தி விழாவும், நாட்டின் சாந்தி சமாதானத்திற்காக ஆன்மீக உயிர் மூலிகைகளைக் கொண்டு மகரிஷிகளை வேண்டி விசேட மகா யாக பூஜை மற்றும் முகேஷ் மகரிஷிகளுக்கு அபிஷேக பூஜைகளும் 26.10. 2023 ஆம் திகதி நுவரெலியா ஸ்ரீ இலங்காதிஸ்வரர் ஆலயம் காயத்ரி பீட வளாகத்தின் பக்தி பூர்வமாகவும் வெகு விமர்சையாகவும் நடைபெற்றது.இதன் போது மகரிஷி ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் பக்தர்கள், ஆன்மீகவாதிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட உப அரசாங்க அதிபர் போதிமான,வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

மேலும் காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு மகரிஷிகளின் ஜனன தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆலய வளாகத்தில் ஸ்ரீ காயத்திரி பீட அறநெறி மாணவர்களின் விசேட கண்காட்சி கூடம் மக்களின் பார்வைக்காக திறப்பு விழா நிகழ்வும்,இடம்பெற்று மாவட்ட உப அரசாங்க அதிபர் போதிமான்ன மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கிய நிகழ்வும் இடம்பெற்றது.

இதை தொடர்ந்து மகேஸ்வர பூஜையுடன் அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

 

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here