நானுஓயா சமுர்த்தி உத்தியோகத்தரின் அநாகரிக செயல் – குவியும் முறைப்பாடுகள்

0
220

நானுஓயா 476/ஏ கிரிமிட்டி கிராமசேவகர் பிரிவிட்குட்பட்ட
கணவன் அற்ற பெண்களை தெரிவு செய்து அவதூறுபடுத்தும் நோக்குடன் உண்மைக்கு புறம்பான செய்தியை வழங்கி சமுர்த்தி வங்கியில் பாரிய ஏமாற்றம் ஏற்பபட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தற்போது பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்படும் அரிசி பருப்பு தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கி மேலும் பல்வேறு சலுகைகள் வழங்குவதாக கூறி சமுர்த்தி வங்கியில் புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் 5000 ரூபாய் பணம் வைப்பிலிட வேண்டும் எனக் கூறி அதிகமான கணவனை இழந்த பெண்களை தெரிவு செய்து சமுர்த்தி
காரியாலயம் வரவழைத்துள்ளனர்.

காரியாலயத்தில் கூடிய கணவனை இழந்த பெண்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு தொடர்பு கொண்டு வினவிய போது இவ்வாறான செயற்பாடு உண்மைக்கு முரணானது என தெரிவித்தமையால் நானுஓயா சமுர்த்தி உத்தியோகத்தரின் அநாகரிக செயலுக்கு எதிராக பாதிப்படைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைபாடுகளை மேற்கொண்டு நீதியான தீர்வை பெற முயற்சிக்க ஒன்று திரண்டு உள்ளனர் .

பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் அரிசி உள்ளிட்ட வீட்டுப்பாவனைப் பொருட்களை வாங்குவதற்கும் தயாராக வந்த பொது மக்கள் திரும்பிச் செல்வதற்குக்கூட பேருந்துக்கு பணமில்லாமல் தத்தளித்துக்கொண்டு நிற்கின்றனர்

எனவே பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இது தொடர்பில் சரியான தீர்மானத்தை மேற்கொண்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை மக்கள் எதிர்பார்கின்றனர்.

 

டி.சந்ரு செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here