பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், 8,000 இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மெக்சிகோவை தாக்கிய ஓடிஸ் சூறாவளி காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரபல சுற்றுலா தலமான Acapulco இல் உள்ள 80 வீதமான ஹோட்டல்கள் இந்த சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சூறாவளியினால் Acapulco கடற்கரை ஹோட்டல்களில் பல பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பல குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதுடன், வீதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், 8,000 இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.