பொலிசாரிடம் இருந்து பொதுமக்களுக்கான விசேட கோரிக்கை

0
147

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலக குழு உறுப்பினர்களால் கோரப்படும் கப்ப பணத்தை வழங்க வேண்டாம் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் காவல்துறை கோரியுள்ளது.

வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள விஷேட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கப்பம் கோரி வர்த்தகர்கள் உள்ளிட்ட சிலரை அச்சுறுத்திய சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் காவல்துறைக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.இந்நிலையிலேயே, இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தி நாட்டிலுள்ள சிலர் கப்பம் கோரும் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here