இலங்கை மற்றும் இந்திய அணிகள் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்பில் மோதும் 10ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். 2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது.
மும்பை – வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ண இறுதி போட்டியின் பின்னர், இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடரில் முக்கியமான தருணத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.இலங்கை மற்றும் இந்திய அணிகள் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்பில் மோதும் 10ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.
குறித்த போட்டிகளில் இரு அணிகளும் தலா நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளது.