காணிகளின் உரிமை தொடர்பான பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்படும் : பிரதமர்!

0
136

காணிகளின் உரிமை மற்றும் ஏனைய காணி பிரச்சினைகள் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

புதிய கிராமம் – புதிய நாடு தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற வவுனியா மாவட்ட உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் குணவர்தன, விவசாயிகளுக்கும் பயிர்ச்செய்கைக்கும் உதவும் வகையில் காணிப்பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களையும் மேம்படுத்தி விரைவான அபிவிருத்திக்கு இட்டுச்செல்ல தொழில்நுட்ப உதவி மற்றும் இயந்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here