தனது 14 வயது மகளை கத்தியால் குத்தி படுகாயமடையச் செய்த தந்தை சந்தேகத்தின் பேரில் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை, பலபத்வல, கிரிகல்பொத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி மாத்தளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.சிறுமியின் கை, காது மற்றும் நெற்றியில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக மாத்தளை தலைமையக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மாத்தளை தலைமையக காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகிறது.