விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்
இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வியை சந்தித்ததையடுத்து கிரிக்கெட் சபையின் அனைவரும் பதவி விலக வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் அறிக்கையை வெளியிட்டதோடு ஜனாதிபதிக்கும் கடிதமொன்றை அனுப்பி இருந்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்விக்கான பொறுப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக குழுவும், தேர்வு குழுவும் ஏற்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.