1,800 பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்

0
157

இந்த வருடத்தில் மாத்திரம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 1,800 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 800 பேர் இலங்கையில் பல்கலைக்கழக சேவையிலிருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளதாக அதன் பேச்சாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

ஏனைய 1,000 பேர் கல்வி விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் வசதிகள் இன்மை பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாக சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நேற்று தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here