டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிறுவர் விளையாட்டு முற்றம் திறந்து வைத்து உபகரணங்கள் வழங்கிவைப்பு.

0
246

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் புனரமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு முற்றம் திறந்து வைத்து வைத்தியசாலைக்கு உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பதில் வைத்திய பணிப்பாளர் வைத்தியர் ஜெயபிரகாசம். அருள்குமரன் தலைமையில் இன்று 4 ம் திகதி நடைபெற்றது.
இந்திய அரசாங்கத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட புதிய கட்டடத்தில் இயங்கி வந்த சிறுவர் விளையாட்டு முற்றம் விளையாட்டு உபகரணங்கள் உடைந்த நிலையில் செயலிழந்திருந்தன.
அதனை கொழும்பு பெட்டா (லயன்ஸ் க்ளப்) அரிமா கழகம் புனரமைத்து இன்று உத்தியோகபூர்வமாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது,
அதனை தொடர்ந்து மகப்பேற்று பிரிவில் உள்ள தாய்மார்களுக்கு சிசுவினை குளிப்பாட்டுவதற்கு தேவையான பாத்திரம்,சவரக்காரம்,க்லோன்,கிரிம்,ஆடை உள்ளிட்ட பொருட்கள் கையளிக்கப்பட்டன.

தொடர்ந்து வைத்தியசாலைக்கு தேவையான ஒருசில மருந்து பொருட்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள்,காகிதாதிகள் ஆகியனவும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

இந் நிகழ்வுக்கு பெட்டா அரிமா கழகத்தின் தலைவர் லயன் சித்ரா இளமநாதன் செயலாளர் முத்துகுமார் பொருளாளர் லயன் மதியழகன் உட்பட அரிமா கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here