அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட எவரேனும் தாம் பணியாற்றும் பாடசாலைக்கு சமூகமளிக்க சிரமம் ஏற்படும் நிலையில், அருகில் உள்ள பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும்.
சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு – பதுளை வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ள நிலையில், பண்டாரவளை பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பகுதியில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட எவரேனும் தாம் பணியாற்றும் பாடசாலைக்கு சமூகமளிக்க சிரமம் ஏற்படும் நிலையில், அருகில் உள்ள பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரதேசத்தில் உள்ள 144 பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாடசாலைகளுக்கு வருகைதரும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அதிக கவனம் செலுத்துமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.