சர்வதேச சுகாதார விஞ்ஞானப் பிரிவு சிறுவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

0
149

சர்வதேச சுகாதார விஞ்ஞானப் பிரிவின் போசாக்கு அலகு பிரதானி வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்லொன்றினை விடுத்துள்ளார்.

அவ்வகையில், இலங்கையில் சிறுவர்களுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பாடசாலை பிள்ளைகள் மத்தியில் உடல் எடை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“அநேகமான மாணவ மாணவியர் சந்தையில் விற்பனை செய்யப்படும் முறுக்கு, வடை, ரோல்ஸ், பெட்டிஸ், டோனட், கேக் உள்ளிட்ட உணவு வகைகளை உட்கொள்கின்றனர்.சீனி, எண்ணெய் போன்றன அதிகளவில் செறிவான உணவுப் பொருட்களை உட்கொள்வதனால் சிறு வயதிலேயே பாரிய ஆபத்துகளை எதிர்நோக்க நேரிடுகிறது.

குறைந்த வயதிலேயே சிலருக்கு மாரடைப்பு, நீரிழிவு நோய்கள் ஏற்படுகிறது.பிள்ளைகள் எண்ணெய் மற்றும் சீனி செறிந்த உணவுகளை வகைகளை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.” என அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here