காதலை மறுத்த யுவதியை கத்தியால் குத்திய இளைஞன்!

0
168

காதலை மறுத்த காரணத்திற்காக தனது உறவினான பெண்ணை கத்தியால் குத்தி காயப்படுத்திய இளைஞன் நாராஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் கொழும்பு நாராஹேன்பிட்டி நில அளவை திணைக்களத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் காலி பின்னதுவ வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த 29 வயது யுவதி ஆவார்.

இவருடன் காலி பிரதேசத்தில் இருந்து கொழும்பு நாரஹேன்பிட்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் சந்தேக நபரும் பயணித்துள்ளார்.

குறித்த பஸ் யுவதியின் திணைக்களத்திற்கு முன்னால் நிறுதப்பட்ட நிலையில், இறங்குவதற்கு தயாரான யுவதியை சந்தேக நபர் தன்னிடம் இருந்த கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார்.

காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு யுவதியின் வலது கையின் முழங்கை பகுதியிலும் இடது காலின் முழங்காலுக்கு கீழ் பகுதியிலும் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here