மேக்ஸ்வெலின் அதிரடி ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

0
143

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

ஐசிசி உலகக் கிண்ண போட்டியின் 39 ஆட்டம் இன்றைய தினம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையெ இடம்பெற்றது.குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட்ட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், க்ளென் மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.இந்த நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 201 ஓட்டங்கள் எடுத்தார்.கிளென் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகள் அடங்கலாக 201 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நவீன்-உல்-ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here