போலியான தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாறாமல் பிள்ளைகள் தொடர்பில் பாடசாலையில் கேட்டறிந்து உண்மையை உறுதிப்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
பாடசாலை சென்ற பிள்ளைக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறி பெற்றோரை ஏமாற்றி வீடுகளில் திருடும் கும்பல் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, கொழும்பிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றின் பிள்ளையின் தந்தையை, பாடசாலையின் பிரதி அதிபர் அழைத்து, குழந்தை திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த குழந்தையின் தந்தை ஒரு சட்டத்தரணி எனவும், இது தொடர்பில் பாடசாலையில் முதலில் வினவியபோது அவ்வாறான எவ்வித பரிந்துரையும் வழங்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், போலியான தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாறாமல் பிள்ளைகள் தொடர்பில் பாடசாலையில் கேட்டறிந்து உண்மையை உறுதிப்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.