ஐஸ்லாந்தின் Fagradalsfall பகுதியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம் காரணமாக எரிமலை ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்து அரசாங்கம் அந்த நாட்டில் அவசர நிலையை அறிவித்துள்ளது.ஐஸ்லாந்தின் Fagradalsfall பகுதியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம் காரணமாக எரிமலை ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதால் இவ்வாறு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் அமைதியான நாடு என கருதப்படும் ஐஸ்லாந்தில் 14 மணிநேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகை வெளியேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எரிமலைக் குழம்புகளால் ஏற்படும் சேதத்தை குறைப்பதற்கு இரண்டு மைல் நீளமுள்ள புவிவெப்ப சுவர் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், ஐஸ்லாந்தில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.