புகையிரத ஊழியர்கள் பயணித்த உழவு இயந்திரத்தின் பெட்டி நடு வீதியில் குடை சாய்ந்து அதில் பயணஞ் செய்த 09 பேர் படுகாயமடைந்து 08 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மல்லியைப்பூ சந்தி பகுதியில் நேற்று 18 திகதி மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது,
குறித்த சம்பவத்தில் புகையிரத திணைக்களத்தில் பணிபுரியும் தொழிலாளர்களே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பகுதியில் புகையிரத பணிக்காக உழவு இயந்திரத்தில் அழைத்துவரப்பட்ட குறித்த ஊழியர்கள் வேலை முடிந்து மீண்டும் நாவலபிட்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த போது உழவு இயந்திரத்தின் பெட்டி கழன்று வீதியில் குடை சாநய்துள்ளது.
இதனால் குறித்த ஊழியர்களுக்கு தலை கால்,கை ஆகியவற்றில் பலத்த காயங்கள் ஏற்பட்டதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலைவாஞ்ஞன்