அக்கரபத்தினை அல்பியன் தோட்ட நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும் அல்பியன் தேயிலை தொழிற்சாலை சுமார் ஒரு மாதமாக இயங்கவில்லை காரணம் தோட்ட நிர்வாகம் களவு வேளையில் ஈடுபட்டுள்ளது.
சுமார் 520 தேயிலை கிலோ சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் கூட ஒன்றும் வேலை செய்யவில்லை இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு இவ் சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து அவ்விடத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் மற்றும் உப தலைவர் கௌரவ சச்சிதானந்தன் அவர்களும் இணைந்து குறித்த நிர்வாகத்துடன் உரையாடி கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்கள் அத்தோடு களவாடப்பட்ட தேயிலைக்கும் அங்கு தொழிற் புரிகின்ற தோட்ட தொழிலாளர்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை அத்தோடு தொழிற்சாலை ஒரு வாரத்துக்குள் இயங்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட நிர்வாகத்திற்கு கடுமையான எச்சரிக்கையை சக்திவேல் அவர்களும் சச்சிதானந்தன் அவர்களும் விடுத்துள்ளார்கள்.
அத்தோடு ஒரு வாரத்தில் தொழிற்சாலை இயக்கப்படும் என தோட்ட முகாமை அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக முன்னாள் தவிசாளர் கவுரவ கதிர்ச்செல்வன் காரியாலய உத்தியோகஸ்தர் ஸ்ரீதரன் மாவட்ட தலைவர் நேரு தாசன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
டி சந்ரு திவாகரன்




