வழமைக்கு திரும்பியது மலையக இரயில் சேவைகள்

0
265

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையிலான இரயில் மார்க்கத்தில் மண்மேடு சரிந்து விழுந்த நிலையில் மலையகத்துக்கான இரயில் சேவைகள் பாதிப்படைந்தன.நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலையகத்துக்கான இரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையிலான இரயில் மார்க்கத்தில் கடந்த 22 ஆம் திகதி மண்மேடு சரிந்து விழுந்த நிலையில் மலையகத்துக்கான இரயில் சேவைகள் பாதிப்படைந்தன.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவுநேர அஞ்சல் இரயில் ஒஹிய இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

அத்துடன், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே இரயில் ஹப்புத்தளை இரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கபட்டது.

தொடர்ந்து நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அதனால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயண நடவடிக்கையினை முன்னெடுக்கும் அனைத்து இரயில் சேவைகளும் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன.

நேற்று முதல் மறு அறிவித்தல் வரை இந்த தீர்மானம் அமுலில் இருக்குமென இரயில்வே திணைக்களம் முன்னதாக அறிவித்தது.

இருப்பினும், தற்போது இரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here