ரயில் இருக்கை முன்பதிவுக்கான புதிய செயலி

0
222

இலங்கையில் புகையிரத பயணிகளுக்கு புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக புதிய டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனம் வடிவமைத்துள்ள செயலி மூலம் இது செய்யப்பட உள்ளது.‘RDMNS.LK Live Train Alerts Mobile’ செயலி மூலம் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எளிதில் அணுகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, RDMNS LK மொபைல் போன் செயலியானது ரயில் இருப்பிடம், ரயில் தாமதம் மற்றும் அதற்கேற்ப வரவிருக்கும் நிலையங்களுக்கான எதிர்பார்க்கப்படும் நேரங்கள், உள்ளிட்ட பல ரயில் தொடர்பான சேவைகளைப் பெறும் திறனைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here