சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
அனைத்து மத சடங்குகளுக்கு மத்தியில் தேசபந்து தனது கடமைகளை ஆரம்பித்தார். இந்த நிகழ்வில் பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பல நாட்களாக வெற்றிடமாக இருந்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று (29) நியமனம் செய்யப்பட்டார்.
இதன்படி மேல் மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த தேசபந்து தென்னகோன் 03 மாத காலத்துக்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் நியமனம் தொடர்பில் அரசியலமைப்புச் சபைக்கு அறிவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.