இம்மாதம் 24ம் திகதி நுவரெலியாவில் 200ல் மலையகம் மாற்றத்தை நோக்கி
எனும் தொனிப்பொருளில் மாபெறும் நிகழ்வு மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு தொடர்பிலான ஊடக சந்திப்பொன்றை ஹட்டனில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.
இவ்வூடக சந்திப்பில் இந்நிகழ்வு தொடர்பிலான விளக்கம் அளிக்கப்பட்டது.அதாவது 200 வருடத்தில் மலையகம் எவ்வாறு முன்னேறியிருக்கின்றது எத்தனை சாதனையாளர்களும் சாதனைகளும் இடம்பெற்றுள்ளன என்பது தொடர்பிலும் மலையகத்தின் சாதனையாளர்களை கௌரவப்படுத்தி இந்நிகழ்வு மூலம் நாம் எவ்வாறான லட்சியத்தை அடைந்துள்ளோம் என வெளி உலகிற்கு இந்நிகழ்வின் மூலம் எடுத்துக்காட்டப்படுவதோடு
மலையகத்துக்காக பாடுபட்ட மலையக தியாகிகள் நினைவு கூறப்படுவதோடு கல்வி கற்று மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்றவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்படுவதோடு எவ்வித அரசியல் பாரபட்சமின்றி இடம்பெறும் இந்நிகழ்வுக்கு அனைவரையும் அழைப்பதாக ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுருந்தார்.
மேலும் இந்நிகழ்வு மூலம் ஒட்டு மொத்த உலகமும் நம் மலையகத்தின் வளர்ச்சியை பார்த்து வியக்கும் எனவும் ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.